அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய மாதத்திற்கு 16,318 ரூபாய் தேவை

ஒரு தனிநபர் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள அவருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 16,318 ரூபாய் (தேசிய மட்டத்தில்) தேவைப்படுகிறது என புள்ளிவிபரவியல் மற்றும் தொகை மதிப்பு திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

(பெப்ரவரி  மாத தரப்படுத்தல்) மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாழ்க்கை செலவு தரப்படுத்தலுக்கமைய கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவரது ஒருமாத அடிப்படை தேவைகளுக்கான செலவு 17,599 ரூபாவாக காணப்படுவதுடன், மொனராகலை மாவட்டத்தில் வாழ்பவரின் ஒருமாத செலவு 15,603 ரூபா என திணைக்களம் வாழ்க்கை செலவு சுட்டியை தரப்படுத்தியுள்ளது.

வறுமைக் கோடு என்பது ஒரு நபருக்கு அடிப்படை உணவு மற்றும் உணவு அல்லாத தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச செலவினத்தைக் குறிக்கிறது, மேலும் இது பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் மாதந்தோறும் திருத்தப்படுகிறது.

அறிக்கை : https://www.statistics.gov.lk/povertyLine/2021_Rebase#gsc.tab=0