அநுராதபுரத்தில் தவறான முடிவெடுத்து வைத்தியர் உயிர்மாய்ப்பு !

அநுராதபுரம், ஹொரவப்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரகேவ பிரதேசத்தில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

கெப்பித்திக்கொல்லாவ ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் 38 வயதுடைய வைத்தியரொருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் குடும்பத் தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரவப்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.