அரசாங்க அச்சகத்திற்கு பலத்த பாதுகாப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரச அச்சகத் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழிநடத்தப்பட்ட ஆரம்பகட்ட அச்சிடும் பணிகள்  நடைபெற்று வருவதாக அரச அச்சகர் கங்கா கல்பனீ லியனகே  உறுதிப்படுத்தினார்.

ஓகஸ்ட் 15ஆம் திகதிக்குப் பின்னர் வாக்குச் சீட்டுகள் அனுப்பிவைக்கப்பட்ட பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக லியனகே குறிப்பிட்டுள்ளார்.