கிழக்கின் முதுசமும், தமிழர்களின் அடையாளமுமான திருகோணமலை திருக்கோணேச்சரம் ஆலயத்தை யாப்பு விதிகளுக்கு மாறாகச் செயற்பட்டு அரசுடைமையாக்கத் திட்டமிடும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் அடாவடிகளை வன்மையாகக் கண்டிப்பதுடன் ஆலயச் செயற்பாடுகள் சுயாதீனமாக இடம்பெற வேண்டுமெனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை (13.08.2024) மாலை அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிழக்கு ஆளுநரின் அடாவடிகள் தொடர்ந்தால் வடக்கு- கிழக்கில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை இத்தால் சம்பந்தப்பட்டோருக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வடக்கும், கிழக்கும் தமிழர் தாயகம். கிழக்குப் பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது என்பதை ஆளுநர் அறிவாராக! அரசின் எலும்புத் துண்டுகளுக்காகத் தமிழரின் வரலாற்றுத் தொன்மைகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சி நிரலைக் கைவிடுமாறு கிழக்கின் ஆளுநரைக் கோருகின்றோம் எனவும் குறித்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டபட்டுள்ளது.