இணுவில் காரைக்கால் பகுதியில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான திண்மக் கழிவகற்றும் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06.06.2025) மாலை மீண்டும் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால், குறித்த பகுதியில் பாரிய கரும்புகை மண்டலம் ஏற்பட்டுள்ளமையால் பொதுமக்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள் ளனர்.
குறித்த திண்மக் கழிவகற்றும் நிலையத்தில் இன்று ஐந்தாவது தடவையாகப் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த திண்மக் கழிவகற்றும் நிலையத்தால் அப்பகுதிப் பொதுமக்கள் நீண்டகாலமாகப் பாதிப்பினை எதிர்கொண்டுள்ள போதும் இதுவரை உரிய தீர்வெதுவும் வழங்கப்படவில்லை.
