கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று வியாழக்கிழமை (12) அதிகாலை 03.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று, விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதியில் இந்தியாவின் சென்னை நகரத்தை நோக்கிப் பயணிக்கவிருந்த விமானமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
இதனையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அனைவரும் இணைந்து சந்தேக நபரை கைது செய்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர் இரு தடவைகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ள நிலையில் இவர் இறுதியாக இந்தியாவின் சென்னை நகரத்திற்கு சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (12) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.