இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட படகின் உரிமையாளர் கைது

‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷார செவ்வந்தியை இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டjதாக கூறப்படும் படகின் உரிமையாளரை யாழ்ப்பாணத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு (CCD) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் அராலி கடற்கரையில் இருந்து இந்தப் படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

சி.சி.டி.யின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள் குழுவின் நீண்ட நேர விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட படகின் உரிமையாளர் பொலிஸ் காவில் வைக்கப்பட்டுள்ளார்.