உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷனில் கணிதக் கண்காட்சி

யாழ்.உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியின் கணிதக் கண்காட்சி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(28.06.2024) பாடசாலையின் அதிபர் சோ. புஸ்பாகரன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வடமராட்சி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் த.சுஜீகரன் பிரதமவிருந்தினராகக்  கலந்து கொண்டார். தரம்-06 முதல் தரம்- 11 வரையான மாணவர்களின் பல்வேறு ஆக்கங்களும் குறித்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.