தமது ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதற்காக 03 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்றை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 14ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் கைது செய்துள்ளது.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க, அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக புதன்கிழமை (14) காலை கட்டுப்பணத்தை செலுத்திவிட்டு செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.