எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் தாம் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.
அரசியல் தீர்மானம் குறித்து வினவிய போது இது தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.
“இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. யாராவது நாட்டிற்கு நல்லது செய்தால், அதற்காக உதவுவேன்.. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். பொதுத்தேர்தல் குறித்து இன்னும் சரியாக சூடுபிடிக்கவில்லை. எப்படியிருந்தாலும், எதிர்காலத்தில் என்ன செய்வது என்று நான் இன்னும் தீர்மானிக்கவில்லை..”