எமக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் : அநுர அரசும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறது!

சிங்கள அரசாங்கங்களால் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். தற்போதைய அநுர அரசும் தமிழ் மக்களை ஏமாற்றிவருகிறது. எங்களுக்கு நடந்தது இனப்படுகொலை, தமிழ் மக்களுக்கு நீதி விசாரணை வேண்டும். அது சர்வதேச நீதி விசாரணையாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பிகர் சிறிதரன் தெரிவித்தார்.

யாழ். செம்மணியில் திங்கட்கிழமை (23) ஆரம்பித்த அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இப்போராட்டமானது உலகத்தின் கண்களை திறப்பதற்கான போராட்டமாகும். எங்களுக்கு நடந்தது இனப்படுகொலை, தமிழ் மக்களுக்கு நீதி விசாரணை வேண்டும். அது சர்வதேச நீதி விசாரணையாக இருக்க வேண்டும்.

சிங்கள அரசாங்கங்களால் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். தற்போதைய அநுர அரசும் தமிழ் மக்களை ஏமாற்றிவருகிறது. கடந்த காலஆட்சியாளர்களுக்கு சளைத்தவர்கள் நாம் அல்ல என்ற வகையில் அண்மைய நடவடிக்கைகள் அமைந்து இருக்கின்றன.

எனவே இப்போராட்டமானது சர்வதேச விசாரணையை வலியுறுத்திய வகையிலும், இங்கு கண்டு எடுக்கப்படுகிற எலும்புக் கூடுகளுக்கு நீதி விசாராணை வேண்டியும் இப்போராட்ம் இடம்பெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் திரளுகின்ற மக்கள் திரட்சி, உலகத்தின் கண்களையும் உலகத்தின் மனசாட்சிகளையும் திறக்கும். எனவே இப்போராட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.