ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொஷான் ரணசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் தெரிவு செய்யப்பட்டால் எரிபொருள் விலையை 50 வீதத்தால் குறைப்பதாக உறுதியளித்துள்ளார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய அவர், VAT வரியை 10% ஆக குறைப்பதாகவும் உறுதியளித்தார்.
இந்த பொருளாதார நடவடிக்கைகளை தனது பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்களாக நிலைநிறுத்தி, மக்கள் மீதான நிதிச்சுமையை இலகுபடுத்துவதே தனது முன்னுரிமை என ரணசிங்க கூறினார்.