எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவருக்கும் ஆதரவளிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலருடன் உரையாடியவேளை இதனை தெரிவித்துள்ள அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கும் எதிர்கட்சி தலைவருக்கும் ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர், எனினும் எவருக்கும் ஆதரவளிப்பதில்லை என நான் தீர்மானித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர் நான் , கட்சியின் போசகர்,ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களி;ற்கு அவர்களிற்கு விருப்பமான வேட்பாளர்களிற்கு ஆதரவளிப்பதற்கான உரிமையுள்ளது என சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
எனக்;கு இது குறித்து எந்த ஆட்சேபனையும் இல்லை எனினும் எவரையும் நான் ஆதரிக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.