ஏறாவூரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை ; சந்தேக நபர் கைது

மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்சிநகர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலைச் சம்பவம் கடந்த 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஏறாவூர் பொலிஸார், சந்தேக நபரை நேற்று திங்கட்கிழமை (12) காலை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்  ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஏ. டி. எம். அட்டையை திருடி பணமோசடியில் ஈடுட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.