கடலில் மிதந்த திரவத்தை அருந்திய மீனவர்கள் ; இருவர் பலி : நால்வர் கவலைக்கிடம்!

படகில் மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்கள் கடலில் மிதந்த நிலையில் காணப்பட்ட  போத்தலிலிருந்த திரவத்தை அருந்தியதில்  இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக கடற்றொழில் திணக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

ஏனைய ஐந்து மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் தற்போது மற்றுமொரு மீன்பிடி படகு மூலம் இன்று (29)  கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆழ்கடலில் 317 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.