கடுவலையில் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்!

கடுவலை – ரனால பிரதேசத்தில் அட்டை பெட்டி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ பரவல் இன்று புதன்கிழமை (19) அதிகாலை ஏற்பட்டுள்ளது.

தீ பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் கொழும்பு மற்றும் கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.