கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஆயுதங்கள் மீட்பு !

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) பிற்பகல் தலதா வீதியில் உள்ள இரண்டு கடைகளில் இரண்டு ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் , 2 1/2 அடி நீள வாள் என்பன விஷேட அதிரடிப்படை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு  குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, இரண்டு கடைகளின் உரிமையாளர்களையும் விசாரணைக்காக கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரண்டு ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் , வாள் என்பன பழைய பொருட்கள் விற்கப்படும் இரண்டு கடைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த, துப்பாக்கிகள் பாவனை செய்யும் நிலையில் காணப்படவில்லை எனவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.