கல்கிஸ்ஸ, கிராண்ட்பாஸ் பகுதிகளில் போதைப்பொருளுடன் 4 பேர் கைது!

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமனாராம பகுதியில் 10 கிராம் மற்றும் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 32 வயதுடைய கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

இதேவேளை, கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட பகுதியில் 10 கிராம் 400 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சந்தேக நபர் 24 வயதையுடைய கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

மேலும், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய களனி பாலத்துக்கு அருகில் 10 கிராம் 960 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஜிமா பகுதியில் 09 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.