காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் சடலமாக ஞாயிற்றுக்கிழமை (30) மீட்கப்பட்டுள்ளார்.

முறிகண்டி வசந்தநகர் பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய செல்வரத்தினம் றுசாந்தன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

குறித்த சிறுவன், அவது சகோதரன் உட்பட நால்வருடன் நீராடுவதற்காக, கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளத்திற்கு , சனிக்கிழமை (29) காலை 11.30 மணியளவில் சென்ற போது நீரில் மூழ்கிய நிலையில் அருகில் உள்ள இராணுவ முகாமிற்கும், உறவினர்களிற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இந் நிலையில், சனிக்கிழமை (29) முதல் இரணைமடு மீனவர்களுகும், பிரதேச மக்களும் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (30) அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.