காரைநகரில் 41 ஆவது ஆண்டு கறுப்பு ஜீலை நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் 41 ஆவது ஆண்டு  கறுப்பு ஜீலை நினைவேந்தல் நிகழ்வு  செவ்வாய்க்கிழமை (23.07.2024) மாலை யாழ்.காரைநகரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  ஈஸ்வரபாதம் சரவணபவன் பொதுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு தொடர்ந்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுரைகளும் இடம்பெற்றன.