மரநடுகை மாதத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் “கார்த்திகைப் பூக்கள்” எனும் பெயரில் மரவளர்ப்புச் செயற்திட்டம் வெள்ளிக்கிழமை (01.11.2024) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
இதன் முதற்கட்டமாக யாழ்.சன்மார்க்க மகா வித்தியாலய வளாகத்தில் இன்று மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கார்த்திகையின் மகத்துவத்தை எமது அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் நோக்குடன் செயற்படுத்தப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.