கிராம சேவகர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

அரசாங்கம்  வெளியிட்டுள்ள வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து  நாடளாவிய ரீதியில் உள்ள கிராம சேவகர்கள்  இன்று திங்கட்கிழமை (12) முதல் நாளை வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதற்கிணங்க நீர்கொழும்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 39  கிராம சேவகர்கள் காரியாலயங்களும் மூடப்பட்டுள்ளன.

அந்த வகையில் கிராம சேவகர்கள்  இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை  கடமையில் இருந்தும் விலகியிருப்பதோடு புதன்கிழமை  முதல் சனிக்கிழமை வரை கறுப்பு பட்டி அணிந்து கடமையில் ஈடுபடவுள்ளனர்.