கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு எதிரான மனு மீதான விசாரணை 22 ஆம் திகதி!

கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு  எதிரான மனு மீதான விசாரணையை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அன்றைய தினம் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.