கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும்!

கிழக்கை மண்ணை காப்பாற்றுவதற்காக மக்களுடன் இனைந்து கடந்த 15 வருடமாக  போராடிவருகின்றோம் எனவே கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் அப்போது தான் கிழக்கை காப்பாற்ற முடியும் என இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் தேசிய அமைப்பாள் தர்மலிங்கம் சுரேஸ் கிழக்கு மண்ணிலிருந்து அறைகூவல் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை சந்தியில் புதன்கிழமை(06) மாலை சைக்கிள் சின்னதில் தேர்தல் பிரச்சாரத்துக்கான கட்சி காரியாலயம் திறந்துவைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு அறைகூவல் விடுத்தார்.

இந்த தேர்தலை இதுவரைக்கும் நடந்த தேர்தல்போல எங்கள் மக்கள் கையாளக் கூடாது என ஆரம்பத்திலிருந்தே தெரிவித்துவருகின்றோம் இந்த தேர்தல் தமிழ் மக்களுக்குப் பேரம் பேசக்கூடிய இறுதி சந்தர்ப்பமாக அமையப் போகின்ற இந்த தேர்தலுக்குப் பின்னர் தமிழ் மக்களுடைய வாழ்வு  இந்த தீவிலே ஒரு அடிமைத்தனமாக இருக்கப் போகின்றதா? அல்லது சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் சம உரிமையோடு வாழப்போகின்றோமா? என்ற ஒரு கேள்வி எழுப்புகின்ற ஒரு தேர்தல் அமையப் பெற்றிருக்கின்றது.

தமிழர்களை பொறுத்தமட்டில் தமிழர்கள் ஒரு நீண்ட நெடிய வரலாற்று ரீதியாகப் போராடி ஒரு மரபுவழியாக தமக்கான ஒரு தனித்துவத்தை பெற்றிருக்கும் ஒரு இனம் அதனடிப்படையில் தமிழர்கள் இந்த தீவிலே சுதந்திரமாக வாழ்வதற்காக அதிக விலை கொடுத்துள்ளனர் உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர் கோடான கோடி சொத்துக்களை இழந்துள்ளனர் நிலங்களைப் பறிகொடுத்துக் கட்டமைக்கப்பட்ட இனழிப்புக்கு உட்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் இந்த தேர்தல் தொடர்பாக மிகுந்த ஆர்வத்துடனும் கரிசனையுடனும் கையாளவேண்டும்.

வடக்கு கிழக்கிலே சைக்கிள் அணி மிகப் பெரும் பலமாக வந்து கொண்டிருக்கின்றது தென்பகுதியை பொறுத்தமட்டில் ஒரு ஊழல் அற்ற நேர்மையான ஒரு அரச தலைவராக அனுரகுமார திசாநாயக்காவை  ஜனாதிபதியாக அந்த மக்கள் தெரிவு செய்துள்ளனர். ஆனால் வடகிழக்கிலே அவ்வாறான ஒரு தலைவரை இதுவரைக்கும் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை ஆனால் இந்த தேர்தல் அந்த சந்தர்ப்பத்தை மக்களுக்குக் கொடுத்திருக்கின்றது.

தமிழ் மக்களின் உரிமைகளைச் சர்வதேச மட்டத்தில் பெற்றுக் கொடுப்போம்  அதற்கு தலமைதாங்க வேண்டும் என்ற அடிப்படையிலே தமிழர்கள் நம்பி யுத்தத்தின் பின்னர் மூன்று தடவைகள் வாக்களித்து அறுதி பெரும்பான்மையான ஆணைகளைப் பெற்று தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனழிப்புக்கு சந்தர்பம் கிடைக்கின்ற போதெல்லாம் அதனைத் தட்டிக்களித்து எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்காது தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்ததை தவிர வேறு எந்தவொரு வேலையையும் இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செய்யவில்லை.

அதனால் நாங்கள் கடந்த 15 வருடங்களாக தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வடகிழக்கிலே நடைபெறுகின்ற கட்டமைப்புசார் இடம்பெறும் இன அழிப்பை மக்களுடன் இணைந்து தடுத்து நிறுத்தி வருகின்றோம் அப்படிப்பட்ட எங்கள் தலைமைக்கும் அணிக்கும் ஒரு தடவை இந்த தேர்தலில் சந்தர்ப்பம் தாருங்கள்.

எந்த நோக்கத்தோடு எங்களைச் சிங்கள தேசம் அழித்ததோ அதற்கான பரிகாரத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் பேரம் பேசி .நா. மனித உரிமை இனழிப்பு தொடர்பான பொறுப்புக்கூறலை சரியான இடத்துக்கு கொண்டு செல்ல ஆணையை தாருங்கள்

மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காகச் செயற்படுகின்ற சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் இந்த அணியைப் பலப்படுத்தப் போகின்றீர்களா? இல்லை வழமைபோன்று சாராயம் அரிசி மாவுக்கும் வெறும் சலுகைகளுக்கும் நீங்கள் வாக்களித்து இனிமேல் உரிமை என்றால் என்ன என்று கேட்கமுடியாத ஒரு நிலைக்கு இட்டுச் சென்று நிரந்தரமாகத் தமிழர்கள் அடிமையாகப் போகின்றோமா? என்ற கேள்வியைப் பெருவாரியான மக்கள் விளங்கி வடக்கிலும் கிழக்கிலும் சைக்கிள் அணிக்குப் பின்னால் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக கடந்த 15 வருடங்களாக இந்த மண்ணில் இருந்து போராடி செயற்பட்டு வருகின்றோம் கிழக்கில் மக்கள் நிச்சயமாக ஆணையை தரும் அதேவேளை வடக்கில்; எங்கள் கட்சி மீது மக்கள் திசை திரும்பியுள்ளனர் அதனால் ஏனைய சிங்கள கட்சிகளும் அவர்களுடன் சோந்திருக்கின்ற கட்சிகளும் குழப்புவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலே கூடியளவு சாராயம் மற்றும் பணங்களையும் கொடுத்து இந்த மக்களை திசைதிருப்புவதற்கான வேலைத் திட்டங்களை செய்கின்றனர்.

வீடு, சங்கு, சின்னத்திலே போட்டியிடுகின்ற அந்த அரசியல்கட்சிகளின் கடந்தகால செயற்பாடு பற்றி எங்கள் மக்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் கிடையாது பிறிந்து செயற்படும் அத்தனை பேரும் இந்த இனத்தை அழிப்பதற்காக 2015ம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கான இடைக்கால யாப்பை உருவாக்கி வைத்துள்ளனர் எனவே  இந்த மண்ணிலே தமிழ் மக்கள் நிம்மதியாக சிங்கள மக்கள் போன்று ஒரு சுபீட்சத்துடன் வாழவேண்டும் என்றால் இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகள்