குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு -2024 இன் கீழ் வட்டத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களுக்கான (Circle Officers) இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (13.08.2024) காலை-09.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்டச் செயலகப் புள்ளிவிபரப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ம.வித்தியானந்த நேசனால் நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக விபரிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதேச செயலக புள்ளிவிபர உத்தியோகத்தர்கள், புள்ளிவிபர உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.