கூரையில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
34 வயதுடைய தவலம்பெலச வெவேபெத்த மடூல்சீமை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மெட்டிக்காத்தன்ன பகுதியில் கட்டிடம் ஒன்றின் கூரையை புனரமைக்கும் போது தவறுதலாக கூரையில் இருந்து கீழே விழுந்து குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மெட்டிக்காத்தன்ன பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்