கெஹலியவின் பிணை மனு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவை நீக்கி தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற  தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஏழு பேரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா இல்லையா மற்றும் பிணை தொடர்பான தீர்ப்பு ஆகியன தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.