கேகாலை நகரத்திற்கு அருகில் உள்ள கட்டடம் ஒன்றில் கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.
கேகாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, கட்டத்தின் மேல் மாடியில் உள்ள கழிவறை ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா பொதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் நீண்ட நாட்களாக இவ்வாறு கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.