யாழ்ப்பாணம் சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் ஏற்பாட்டில் இலங்கை அரசியலில் சிவில் சமூகம் எனப்படுவோர் என்ன தான் செய்கிறார்கள்? எனும் தலைப்பிலான கருத்துரையும் கலந்துரையாடலும் வெள்ளிக்கிழமை (21.06.2024) மாலை-04 மணியளவில் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.முத்துலிங்கம் தொடக்க உரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகவியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.எஸ்.ஜீவசுதன், சமூக- அரசியல் ஆய்வாளர் ம. செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை ஆகியோர் கருத்துரைகளை ஆற்றவுள்ளனர். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெறும்.