கோண்டாவிலில் ஆண்டு விழா

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ்.சாலை ஊழியர் நலன்புரிச் சங்கம் நடத்திய ஆண்டு விழா அண்மையில் கோண்டாவிலில் அமைந்துள்ள யாழ்.சாலை மண்டபத்தில் யாழ்.சாலை முகாமையாளர் என்.குணசீலன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் சந்திரமௌலீசன் லலீசன் பிரதம விருந்தினராகவும், யாழ்.பேருந்து நிலைய ஓய்வு நிலையப் பொறுப்பதிகாரி என்.லோகநாதன் சிறப்பு விருந்தினராகவும், வடபிராந்தியப் போக்குவரத்துச் சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் என்.கேதீசன், வடபிராந்திய செயலாற்றல் பிராந்திய முகாமையாளர் ஏ.ஜெ.லெம்பேட் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.