யாழ். கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா வியாழக்கிழமை (05.09.2024) இரவு சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது புதிதாக அமைக்கப்பட்ட மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய சப்பரத்தில் விநாயகப் பெருமான் வீதி உலா வரும் திருக்காட்சி நடைபெற்றது.