கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இந்த வாரப் புதன் ஒன்று கூடல் நிகழ்வு புதன்கிழமை (22.10.2025) கலாசாலையின் ஆங்கிலநெறிப் பிரிவினரின் ஏற்பாட்டில் கலாசாலை முதல்வர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் அண்மையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியிலிருந்து ஓய்வுபெற்ற ஆங்கிலத்துறை விரிவுரையாளர் தம்பிப்பிள்ளை மோகன் அதிதிப் பேச்சாளராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். ஆங்கிலத் துறை விரிவுரையாளர் வசந்தி வைத்திலிங்கம் அதிதிக்கான அறிமுக உரையை வழங்கினார்.
வாசிப்பின் முக்கியத்துவம் தொடர்பான ஆவணக் காணொளியை ஆசிரிய மாணவி கௌசிகா நிரோஜன் காட்சிப்படுத்தினார். பாடப் புத்தகத்திற்கு அப்பால் வாசிப்பை மேம்படுத்துவோம் எனும் தலைப்பில் கலாசாலையின் இரண்டாவது வருட ஆங்கிலநெறி ஆசிரிய மாணவி தர்மினி சம்பத்குமார் உரை நிகழ்த்தினார்.



