கோழி எருவை ஏற்றிச் சென்ற லொறி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

கண்டி, பதியபெலெல்ல, மந்தாரம்நுவர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (28) வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கோழி எருவை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 300 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது, லொறியின் சாரதியும் சாரதியின் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.