சஜித்தரப்புடன் இணையத் தயாராகும் மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் சில தினங்களில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள சிறுகட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களின் எண்ணிக்கை முப்பதைத் தாண்டியுள்ளதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான உடன்படிக்கைகள் அடுத்த மாதம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்பட்ட பீரிஸ், டிலான் பெரேரா ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.