ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்குவதாக மிஹிந்தலை மகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
“நான் எனது தீர்மானத்தை தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த தீர்மானம் அவர் பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற பல நிபந்தனைகளுடன் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தலைவருக்கு அதிகாரத்தை கொடுத்து அவரை செயல்பட வைப்போம்’ என தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.