சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (05) இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 9400 சிகரட்டுகள் அடங்கிய 47 சிகரெட்டு கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.