சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 5 பேர் கைது

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ.330 மில்லியன் மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து மதுவரித் திணைக்களத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் துறைமுக அதிகாரசபையின்  ஊழியர்கள் மூவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்களிடமிருந்து 20 இலட்சத்து 30 ஆயிரம் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.