சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

முன்னாள் போராளி தமிழரசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டது.

இதனைதொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது. இந் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திகுமார் மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.