சமுர்த்தி முகாமையாளர்கள் குழு கடமை நேரத்தில் அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்ட சம்பவம்

கண்டி மாவட்ட சமுர்த்தி முகாமையாளர்கள் குழுவொன்று கடமை நேரத்தில் அரசியல் கூட்டிடமொன்றில் கலந்து கொண்ட சம்பவம் தொடர்பில் கண்டி தேர்தல் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சில சமுர்த்தி முகாமையாளர்கள் விவசாயக் குழு, கடன் விசாரணை, முதலீட்டு நடவடிக்கைகள் தொடர்பான விசாரணை போன்ற விடயங்கங்களுக்கு  வெளியேறும் ஆவணங்களில் குறிப்பிட்டு உரிய கூட்டத்திற்குச் சென்றுள்ளதாக கண்டி தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கூட்டத்தில் கலந்துகொண்ட சில சமுர்த்தி முகாமையாளர்கள் தேர்தல் கடமைகளுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும்  தெரிவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்து அறிக்கையை பெற்றுக்கொள்ள கண்டி தேர்தல் அலுவலகம் நேற்று புதன்கிழமை  (11) நடவடிக்கை எடுத்துள்ளது.

கண்டி வெல்ஸ்பார்க் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.