சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தினார் மஹிந்த ராஜபக்ஷ

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை (02)  பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சம்பந்தனின் பூதவுடலுக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார்.