சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப அறிக்கைகள் இதுவரை சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை

சர்வதேச நாணய நிதியம் தயாரித்த தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கைகள் இன்றுவரை சபைக்கு சமர்ப்பிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை (02) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

பசில் ராஜபக்ச நிதியமைச்சருக்கு விரலை நீட்டி அறிக்கைகளை வழங்குமாறு கோரிய போதும், இன்று ஜனாதிபதியே அந்த அறிக்கைகளை வழங்காதிருக்கிறார். எனவே அந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.