சியம்பலங்கமுவ நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளைஞன் பலி

குருணாகல், மீகலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலங்கமுவ நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக  மீகலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழந்தவர் குருணாகல்,  மீகலாவ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார்.

உயிரிழந்த இளைஞன் மேலும் இரண்டு நபர்களுடன் இணைந்து நேற்று (11) மாலை சியம்பலங்கமுவ நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மீகலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.