வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய மஹோற்சவப் பெருவிழாவின் கைலாசவாகன உற்சவம் இன்று வியாழக்கிழமை (12.09.2024) மாலை சிறப்புற இடம்பெற்றது.
இதன்போது துர்க்கை அம்பாள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கைலாச வாகனத்தில் அடியவர்கள் புடைசூழ வெளிவீதியில் உலா வந்தாள்.