இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சமூக ஊடக பதிவில் இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்தஅவர்களைச் சந்தித்த உயர் ஸ்தானிகர், அவரது பதவிக்காலத்துக்காக நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
இலங்கை மக்களுக்கான இந்தியாவின் நிலையான அர்ப்பணிப்பு குறித்து இச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் பன்முக இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது