சிறுபான்மை சமூகத்தினர் அதிகளவில் சஜித்திற்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாசவிற்கு சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் அதிகளவு ஆதரவுள்ளமை கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

சுகாதார கொள்கைகள் நிறுவகம்( ihp) மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் போது இது தெரியவந்துள்ளது.

இளைஞர்கள் மத்தியில் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு அதிகளவு ஆதரவு காணப்படுகின்றதுஇகருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 53 வீதமானவர்கள் அவருக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை தமிழர்களில் 55 வீதமானவர்களும்இஇந்திய வம்சாவளி தமிழர்களில் 53 வீதமானவர்களும் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவை வெளியிட்டனர்.

இதேவேளை முஸ்லீம்களில் 71 வீதமானவர்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

60 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களில் 43 வீதமானவர்கள் ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

வடகிழக்கு தவிர ஏனைய மாகாணங்களில் தேசிய மக்கள்சக்தியின் தலைவர் அனுரகுமார முன்னிலையில் காணப்படுகின்றார்.