மொனராகலை பிபில பிரதான வீதியின் தம்வத்த பிரதேசத்தில் சிறைச்சாலை பேருந்து மற்றும் பால் ஏற்றிச் சென்ற பௌசரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் சிறைச்சாலை பேருந்து சாரதி சிறு காயங்களுக்குள்ளாகி மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.