சீன பிரஜை கட்டுநாயக்கவில் கைது

சீனாவில் பாரிய அளவில் பண மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச பொலிஸாரினால் நீலஎச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 3ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய  சீன பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் சீனாவில் பாரிய அளவில் பண மோசடி செய்துள்ள நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கடந்த 03 ஆம் திகதி மாலைதீவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு பின்னர் அவரை நேற்று (04) புதன்கிழமை 08.35 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் மாலைதீவுக்கு நாடு கடத்தியுள்ளனர்.