சுங்க அதிகாரி உயிரிழப்பு

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரி ஒருவர் ஓய்வறையில் திடீரென உயிரிழந்துள்ளதாக மத்தள பொலிஸார் தெரிவித்தனர்.

ருக்மலே, பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சுங்க அதிகாரி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மத்தள பொலிஸார் தெரிவித்தனர்.