காலி – பெந்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வராஹேன பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.
83 வயதான ஜேர்மன் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் சுற்றுலா விடுதியொன்றின் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.