பேராதனை பல்கலைக்கழக, பல்மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் சஜீவ் ஆரியசிங்க, ஜப்பானிய தூதுவரால் விஷேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவர் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் நட்புறவையும் ஒத்துழைப்பையும் கட்டியெழுப்புவதில் 22 ஆண்டுகளாக சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவே ஜப்பானிய தூதரால் மேற்படி விஷேட பாராட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு சிறிய வைபவத்தின் போது இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசோமாட்டாவால், பேராசிரியர் சஜீவ் ஆர்யசிங்கவுக்கு மேற்படி கௌரவ விருது மற்றும் சான்றிதழ் என்பன வழங்கப்பட்டன.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் பேராசிரியர் ரஞ்சித் பல்லேகமவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.





